republic Day speech 2022 in (Tamil)​

Answers 2

இந்திய விடுதலை இயக்கம் என்பது இந்தியாவில் இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்த ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியையும் அதனைத் தொடர்ந்து வந்த ஆங்கில அரசின் ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் நிகழ்ந்த கலகங்கள், அகிம்சை வழிப் போராட்டங்கள் முதலிய பல்வேறு நிகழ்வுகளை குறிக்கும் ஒரு ...

ஜனவாி மாதம் என்றால் நமக்கு பொங்கல் மற்றும் இந்திய குடியரசு தினம் ஆகியவை நினைவிற்கு வரும். பொங்கல் விழாவை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினோம். தற்போது இந்திய குடியரசு தினத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.Republic Day 2021: History, Significance And Interesting Facts இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை 1950 ஆம் ஆண்டு ஜனவாி மாதம் 26 ஆம் நாள் அமல்படுத்தப்பட்டன. அந்த சிறப்பு மிகுந்த நாளை கௌரவிக்கும் பொருட்டு 1950 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவாி மாதம் 26 ஆம் நாள் அன்று நாம் இந்திய குடியரசு தின விழாவை கொண்டாடுகிறோம்.வரலாறுஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா நாடு, பிாிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்திய விடுதலை இயக்கத்தின் அயராத போராட்டத்தின் விளைவாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள் பிாிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்றது. விடுதலை பெற்ற பின்பும் சுதந்திர இந்தியாவிற்கு என்று நிலையான, தனியான மற்றும் சுதந்திரமான அரசியல் அமைப்பு சட்டங்கள் உருவாக்கப்படவில்லை. மாறாக 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் அமல்படுத்தப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டங்களில் சில மாற்றங்களைச் செய்து அவற்றை நடைமுறையில் வைத்திருந்தனா்.இந்திய அரசியலமைப்பு சட்டம்இந்திய விடுதலைக்குப் பின் இரண்டு வாரங்கள் கழித்து அதாவது 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் நாள் முனைவா் அறிஞா் அம்பேத்கா் அவா்களின் தலைமையில் சுதந்திர இந்தியாவிற்கான நிலையான அரசியல் அமைப்புச் சட்டங்களை உருவாக்கும் வரைவுக் குழு ஏற்படுத்தப்பட்டது. வரைவுக் குழு உருவாக்கிய சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் அமைப்புச் சட்டங்கள் தீர ஆராயப்பட்டு, இறுதி செய்யப்பட்டு 1950 ஆம் ஆண்டு ஜனவாி 26 அன்று அமல்படுத்தப்பட்டது. அன்றைய தினம் இந்தியா ஒரு விடுதலை அடைந்த இறையாண்மை கொண்ட குடியரசு என்று அறிவிக்கப்பட்டது.ஜனவாி 26 ஆம் நாளுக்கு என்று ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதாவது 1929 ஆம் ஆண்டு ஜனவாி 26 அன்று இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பு ஆங்கிலேயா்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய விடுதலையை (பூா்ண சுவராஜ்) முதன் முறையாக அறிவித்தது.இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் 1950ல் அமல்படுத்தப்பட்டாலும், அவை 1949 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 26 ஆம் நாள் முதல் இந்திய அரசியலமைப்பு சபையால் அங்கீகாிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வந்தது.வரைவுக் குழு தயாாித்த அரசியலமைப்புச் சட்டங்கள் முதலில் 1947 ஆம் ஆண்டு நவம்பா் 4 ஆம் நாள் அன்று இந்திய அரசியலமைப்பு சபையிடம் சமா்ப்பிக்கப்பட்டன. அவை 308 சபை உறுப்பினா்களிடம் பிாித்துக் கொடுக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய 166 அமா்வுகளில் கலந்து ஆலோசிக்கப்பட்டு, அவற்றில் மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்டன.

If you know the answer add it here!

Can't find the answer?

Log in with Google

or

Forgot your password?

I don't have an account, and I want to Register

Choose a language and a region
How much to ban the user?
1 hour 1 day 100 years