stephen hawking tamil katturai

Answers 2

லண்டன் : ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் முடங்கினாலும் தன்னுடைய இயற்பியல் ஆய்வில் தொய்வு காணாத மிகப்பிரபல விஞ்ஞானி. தன்னம்பிக்கையின் நாயகனாகவும் விளங்கிய இந்த விஞ்ஞானி இன்று உலகை விட்டு மறைந்திருக்கிறார். யார் ஸ்டீபன் ஹாக்கிங் அவர் செய்த சாதனைகள் என்ன?இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் ஜனவரி 8, 1942ம் ஆண்டு பிறந்தவர் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். இவருடைய தந்தையும் ஒரு இயற்பியலாளர், வெப்ப மண்டல நோய்கள் குறித்த ஆய்வை இவர் செய்தார். ஸ்டீபனின் தாயார் லிபரெல் கட்சியில் இருந்தார்.இவரின் பெற்றோர் நல்ல கல்வி பின்புலத்தை கொண்டவர்கள், ஸ்டீபனுக்கு 4 உடன்பிறந்தவர்களும் உள்ளனர். பள்ளி சென்று பாடங்கள் படிக்காமல் எப்போதும் தன்னை சுற்றி புத்தகங்களை வைத்துக் கொண்டு பிடித்தவற்றை படித்து வளர்ந்தவர் ஸ்டீபன். இதனாலேயே ஸ்டீபனை அவரது நண்பர்கள் ஐன்ஸ்டீன் என்று செல்லப்பெயரிட்டு அழைத்தனர். 1962ம் ஆண்டில் பட்டதாரியான ஸ்டீபன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கு சேர்வதற்காக இறுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். இயற்பியல் என்பது எப்போதுமே ஒரு போரான பாடமாகத்தான் பள்ளி காலங்களில் இருந்தது. ஆனால் வேதியியல் மிகவும் பிடித்தமானதாக இருக்கும், ஏனெனில் அதில் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும் என்று ஹாக்கிங் ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். ஆனால் இயற்பியலும், வானியலும் நாம் எங்கிருந்து வந்தோம், நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என்பதற்கான புரிதல்களை ஏற்படுத்தும். அண்டம் பற்றி ஆழமாக தெரிந்து கொள்வதே என்னுடைய விருப்பம் என்றும் ஸ்டீபன் கூறி இருக்கிறார்._________________It's Brilliant Answer Mark me.I hope this will help you.

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

முன்னுரை இளமைக் காலம்

முன்னுரை இளமைக் காலம்கருந்துளை

முன்னுரை இளமைக் காலம்கருந்துளைகருந்துளை கோட்பாடு

முன்னுரை இளமைக் காலம்கருந்துளைகருந்துளை கோட்பாடுமுடிவுரை

முன்னுரை:

அறிவியலின் வளர்ச்சி மனிதனின் அறிவை விரிவாக்குகிறது: ஐயங்களை நீக்குகிறது; பழைய தவறான

புரிதல்களை நீக்குகிறது.

எண்ணங்களை மாற்றுகிறது.

தன்னால் எந்த இயக்கமும் மேற்கொள்ள இயலாத நிலையிலும் அறிவியலின் இயங்கும் தன்மையை

அறிந்து புது உண்மைகளைச்

சொன்னவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

இளமைக்காலம்:

இங்கிலாந்தின் மருத்துவமளை

ஒன்றில் 1963 ஆம் ஆண்டு 21 வயது இளைஞர் அனுமதிக்கப்பட்டார்.

பக்கவாதம் என்னும் நரம்பு நோய்

பாதிப்புடன் அவர் மருத்துவ உலகமே

மிரண்டு போகும் அளவு மேலும் 53

ஆண்டுகள் வாழ்ந்துகாட்டினார்

1985இல் மூச்சுக்குழாய் தடங்களால்

பேசும் திறனை இழந்தார். கன்னத்

தசை அசைவு மூலம் தன் கருத்தைக்

கணினியில் தட்டச்சு செய்து

வெளிப்படுத்தினார். அவரின்

ஆய்வுகளுக்குத் துணையாகச்

செயற்கை நுண்ணறிவுக் கணினி செயல்பட்டது.

வாழ்க்கைப் பயணம்:

சூடான காற்று நிரம்பிய பலூனில்

வானில் பறந்து தனது அறுபதாவது

பிறந்த நாளைக் கொண்டாடினார்.

போயிங் 727 என்ற விமானத்தில்

பூஜ்ஜியஈர்ப்பு விசைப் பயணத்தை

மேற்கொண்டு எடையற்ற தன்மையை

உணர்ந்தார், பிரபஞ்சத்தை இயக்கும்

ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக்

கட்டமைக்க வேண்டியதில்லை என்றார்.

கருந்துளை:

நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிர்கின்றன. அவற்றுள் ஞாயிறும்

ஒன்று ஒரு விண்மீனின் ஆயுள் கால

முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை

கூடுகிறது. அதனால் விண்மீன்

சுருங்கத் தொடங்குகிறது. சுருங்கிய

விண்மீனின் ஈர்ப்பு எல்லைக்குள்

செல்கிற எதுவும், ஏன் ஒளியும் கூட

வெளி வரமுடியாது. இதுவே

கருந்துளை எனப்படும்.

கருந்துளையின் ஈர்ப்பு

எல்லையிலிருந்து கதிர்வீச்சுகள்

வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஒருகட்டத்தில் கதிர்வீச்சும்

அணுத்துகள்களும் கசியத் தொடங்கி இறுதியில் கருந்துளை வெடித்து மறைந்துவிடும். Cecilia's space

கருந்துளை கோட்பாடு:

முன்னர் அண்டவெளியில்

காணப்படும் கருந்துளை அறிவு ஆற்றல் என்று கருதப்பட்டது. ஆனால் ஹாக்கிங் கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என்று நிறுவினார். கருந்துளை குறிந்த தன்னுடைய ஆய்வை ஐன்ஸ்டைன் போல

கோட்பாடுகளாக வெளியிடாமல்

விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டு

ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கியதால்

உலகம் கருந்துளை கோட்பாட்டை

எளிதில் புரிந்து கொண்டது.

முடிவுரை:

உடலில் ஏற்பட்ட உறுப்பு இழப்போ. ஊனமோ ஒருவருக்குக் குறையாகாது. ஊக்கமும் உழைப்பும் சேர்ந்த ஆளுமைத் தன்மை இல்லாமல் இருப்பதே குறையாகும் என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியவர் ஸ்டீபன்.

If you know the answer add it here!

Can't find the answer?

Log in with Google

or

Forgot your password?

I don't have an account, and I want to Register

Choose a language and a region
How much to ban the user?
1 hour 1 day 100 years